உதகை நகரின் மையப்பகுதியில் உள்ள சந்தைப் பகுதியில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், அந்த கடையில் இருந்த மரங்கள், மின்சாதனங்கள் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ மளமளவெனப் பரவி அந்த கடைமுழுவதும் பற்றியெரிந்தது.
அதனையடுத்து, ஐந்து தனியார் லாரிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, சுமார் இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீ முற்றிலுமாக அணைக்கபட்டது. இந்தத் தீ விபத்தில் சுமார் இரண்டு லட்சம் மதிப்பிலான மின்சாதனங்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து உதகை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
அங்குள்ள ஒரு தனியார் வாகனங்கள் பழுதுபார்க்கும் கடையில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.