ETV Bharat / state

உதகையில் நிலச்சரிவைத் தடுக்கும் மாதிரித் திட்டம் தொடக்கம் - உதகை நிலச்சரிவு இடங்கள்

நவீன தொழில்நுட்பத்தினால் நிலச்சரிவைத் தடுக்கும் மாதிரி திட்டத்தை உதகையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கிவைத்தார்.

நிலச்சரிவை தடுக்கும் மாதிரி திட்டம்
நிலச்சரிவை தடுக்கும் மாதிரி திட்டம்
author img

By

Published : Dec 22, 2021, 10:40 PM IST

நீலகிரி: தமிழ்நாட்டில் நிலச்சரிவால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளின் எண்ணிக்கை 4,170ஆக உள்ளன. அவற்றில் மலை மாவட்டமான நீலகிரியில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளின் மொத்த எண்ணிக்கை 284 என கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் உதகையில் உள்ள கோடப்பமந்து, மரப்பாலம் ஆகிய இரண்டு இடங்களில் நவீன தொழில் நுட்பத்தினால் நிலச்சரிவைத் தடுக்கும் மாதிரி திட்டத்தை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, "மண் அரிமானம் ஏற்படும் அபாயகரமான இடங்களில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

இது வெற்றியடையும் பட்சத்தில் மாநிலத்தில் நிலச்சரிவு அபாயகரமான பகுதிகளாக கண்டறியப்பட்ட 4,170 இடங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்" என்றார்.

இதையும் படிங்க: Viral Video: பைக்கில் பாய்ந்த பைரவர்; தலைக்கவசத்தால் தப்பிய காவலர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.