ETV Bharat / state

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான ரமேஷுக்கு உடல்நலக் குறைவு! - ரமேஷ் கூடலூர் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யபட்டு கூடலூர் கிளைச் சிறையில் உள்ள கனகராஜின் உறவினர் ரமேஷுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ரமேஷ்க்கு உடல்நல குறைவு
ரமேஷ்க்கு உடல்நல குறைவு
author img

By

Published : Nov 16, 2021, 3:08 PM IST

Updated : Nov 16, 2021, 3:41 PM IST

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு கூடலூர் கிளைச் சிறையிலிருந்த கனகராஜின் உறவினர் ரமேஷுக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உள்ளிட்ட 11 பேருக்குத் தொடர்பு உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் திருப்புமுனையாக கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோரை கடந்த 25ஆம் தேதி தனிப்படை காவலர்கள் கைது செய்தனர்.

ரமேஷுக்கு திடீர் உடல் நல குறைவு

இதனையடுத்து, அவர்கள் இருவரும் கூடலூர் சிறையில் நீதிமன்ற காவலிலிருந்த நிலையில் ரமேஷ்க்கு நேற்று(நவ.15) மாலை திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிறுநீரக கோளாறு காரணமாகக் கூடலூர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, உதகையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், போதிய வசதி இல்லாததால், மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க:ஒரு வாரத்தில் மட்டும் கடலில் கலந்து வீணான 9 டிஎம்சி நீர் - ஜி.கே. மணி வேதனை

Last Updated : Nov 16, 2021, 3:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.