ETV Bharat / state

கோடநாடு வழக்கு: ஜெயலலிதா ஓட்டுநரிடம் தனிப்படை விசாரணை - the nilgiris

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்பனிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

கோடநாடு வழக்கு, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்பன், Investigation on driver of jayalalitha in kodanad case
கோடநாடு வழக்கு
author img

By

Published : Oct 30, 2021, 3:31 PM IST

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் உள்ளிட்ட 11 பேருக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில், கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் திருப்புமுனையாக கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோரை கடந்த 25ஆம் தேதி தனிப்படை காவலர்கள் கைது செய்தனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்பன்

இந்நிலையில், ஜெயலலிதாவிற்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டுநராக இருந்த ஐயப்பனை நேற்று (அக். 29) உதகையில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: கோடநாடு வழக்கு மறுவிசாரணை நவ.26 க்கு ஒத்திவைப்பு - உதகை நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.