ETV Bharat / state

குன்னூரில் 24 நாட்களாக ஊரைவிட்டு வெளியேறாத யானைக் கூட்டம் - மக்கள் அவதி - elephants funny video

குன்னூரில் 24 நாட்களாக 2 குட்டிகளுடன் 9 யானைகள் கொண்ட யானைக்கூட்டம் ஊரை விட்டு வெளியேறாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

24 நாட்களாக ஊரைவிட்டு வெளியேறாத யானைக்கூட்டம் - மக்கள் அவதி!

author img

By

Published : Jan 7, 2023, 12:59 PM IST

நீலகிரி: குன்னூர் அருகே ரண்ணிமேடு கிராமத்துக்கு உணவை தேடி மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் இருந்து 2 குட்டிகளுடன் 9 யானைகள் அடங்கிய யானைக்கூட்டம் வந்தது. இந்த யானைகள் இந்த பகுதிக்கு வந்து 24 நாட்கள் ஆகியும், வனப்பகுதிக்கு திரும்பிச் செல்லாமல் உள்ளது.

குன்னூர்

இதனால் ரண்ணிமேடு, காட்டேரி, கிளண்டல், கரும்பாலம் உள்ளிட்ட 11 கிராமங்கள் அச்சமடைந்துள்ளனர். அங்குள்ள மயானத்தில் முகாமிட்டுள்ள யானைக்கூட்டத்தை விரட்ட 9 நபர்கள் கொண்ட குழு அமைத்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அதேநேரம் யானையை விரட்டினால் மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று விடும் என்பதால், வனத்துறையினர் திணறி வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் தரப்பில், “இந்த பகுதியில் யானைகளுக்கு தேவைப்படும் உணவு, தண்ணீர் ஆகியவை தாராளமாக கிடைக்கிறது. இந்த இடத்தை விட்டுச் செல்லாமல் யானைகள் தயக்கம் காட்டுகிறது.

இப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் யாரும் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். இரவு நேரங்களில் யானைகள் சாலைக்கு வருவதால், வாகன ஓட்டிகள் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் யானைகள் மனிதர்களை தாக்கும் முன்பு கும்கி யானைகளை கொண்டு வந்து, இந்த யானைகளை விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: தென்காசி மலைப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த யானை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.