ETV Bharat / state

காலில் காயமுற்று தவித்த குரங்கை மீட்டு வனத்துறையினர் சிகிச்சை! - Foresters treat a monkey with a leg injury

நீலகிரி: உதகையில் காலில் அடிபட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்ட குரங்கை மீட்டு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.

குரங்கை மீட்டு வனத்துறையினர் சிகிச்சையளிப்பு!

author img

By

Published : Mar 3, 2021, 1:30 PM IST

உதகை அருகே பிங்கர் போஸ்ட் பகுதியில் குரங்குகளுக்குள் ஏற்பட்ட சண்டையில் ஒரு குரங்கிற்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்தக் குரங்கு, கடந்த 3 நாள்களாக காயத்தால் நடக்க முடியாமலும், மரத்தின் மேல் ஏற முடியாமலும் ஒரே இடத்தில் அமர்ந்தவாறு தவித்து வந்தது. அதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

குரங்கை மீட்டு வனத்துறையினர் சிகிச்சையளிப்பு!

தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறை அலுவலர்கள், குரங்கை பத்திரமாக மீட்டு குடிக்க தண்ணீர், சாப்பிட பழங்களை வழங்கினர். அதன்பின்னர், குரங்கின் காலில் ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவ சிகிச்சை அளிக்க, உதகையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க : ராகுல் இளம் தலைவர்; பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்' - குஷ்பூவின் குசும்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.