நீலகிரி: உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில் நிலைய சந்திப்பைச் சுற்றி ஏராளமான தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. தற்போது தமிழ்நாட்டில் கரோனா பரவல் குறைந்து வருவதால் உதகைக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று (மார்ச் 3) காலை ரயில்நிலையம் முன் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விடுதியின் ஒரு அறையில் பற்றிய தீ, மற்ற அறைகளுக்கும் வேகமாகப் பரவியது. இந்த தீ விபத்தில் விடுதியில் இருந்த சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
விபத்தின்போது விடுதியில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற உதகை தீயணைப்பு துறையினர், சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இதையும் படிங்க: மனைவியை அரிவாளால் வெட்ட முயன்ற கணவர் - பதைபதைக்கும் வீடியோ காட்சி