நீலகிரி மாவட்டம் குன்னுார் பகுதிகளில் கடந்த சில நாள்களாக காலை நேரங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகள் பசுமையாக மாறி வருகின்றன.
உறைபனியால் வறட்சியாக இருந்த வனப்பகுதிகள் பசுமைக்கு மாறி வருகின்றன. குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையின் இருபுறங்களிலும் வனப்பகுதிகள் உள்ளன. இந்நிலையில் உணவைத் தேடி சமவெளிப் பகுதிகளிலிருந்து குட்டியுடன் ஏழு யானைகள் வந்து மேட்டுப்பாளையம் சாலையில் முகாமிட்டு உள்ளன. யானைகளை சாலைக்கு வராமல் தடுக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அருகில் உள்ள ஆதிவாசி கிராமத்திற்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்யக்கூடாது என வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வானிலை குறித்து தகவல் பரிமாற்ற மிதவை உபகரணம் கண்டெடுப்பு