ETV Bharat / state

சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க வேண்டிய அவசியமில்லை - ஆ.ராசா - buy a price

நிலகீரி: தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கி விட்டதாகவும், சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார்.

ஆ.ராசா
author img

By

Published : Jun 10, 2019, 5:46 PM IST

நீலகிரி மாவட்டத்தில் மூடியுள்ள 6 அரசுப் பள்ளிகளை திறக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யாவை நேரில் சந்தித்து ஆ.ராசா மனு அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் போதிய மாணவர்கள் இல்லாத காரணத்தால்தான் அந்தப் பள்ளிகள் மூடபட்டுள்ளதாகவும், அந்த பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த கடந்த ஒரு வருடமாக நடவடிக்கை எடுத்துவந்ததாகவும் கூறினார்.

மேலும் அவர், போதிய மாணவர்கள் வராததால்தான் அந்தப் பள்ளிகள் தற்காலிகமாக மூடபட்டுள்ளது எனவும், மாணவர்கள் வந்தால் மூடப்பட்டுள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கபடும் என்றும் உறுதி அளித்தார்.

சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க வேண்டிய அவசியமில்லை - ஆ. ராசா

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா, மாவட்டத்தில் மூடபட்ட பள்ளிகளை திறக்க வேண்டும் என கிராம மக்கள் என்னிடம் கோரிக்கை வைத்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து சம்பந்தப்பட்ட பள்ளிகளை மீண்டும் திறக்க வலியுறுத்தினேன்.

இதைத்தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றைத் தலைமை பிரச்னை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன. விரைவில் ஆட்சி மாற்றம் வரும். அதேபோல் ஆட்சியை கவிழ்க்க சட்டமன்ற ஊறுப்பினர்களை விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என்றார்.

உதகை                                10-06-19
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவதற்காகன அறிகுறிகள் தென்பட தொடங்கி விட்டதாகவும், சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் திமுகாவுக்கு இல்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா உதகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்….
   உதகையில் உள்ள நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர் அலுவலகத்திற்கு இன்று காலை வந்த முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மாவட்ட ஆட்சிதலைவர் இன்னசன்ட் திவ்யாவை நேரில் சந்தித்து நீலகிரி மாவட்டத்தில் மூடபட்டுள்ள 6 அரசு பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார். அதனை பெற்று கொண்ட இன்னசன்ட் திவ்யா போதிய மாணவர்கள் இல்லாத காரணத்தால் அந்த பள்ளிகள் மூடபட்டுள்ளதாகவும், அந்த பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த  கடந்த ஒரு வருடமாக நடவடிக்கை எடுத்து வந்ததாகவும் ஆனால் போதிய மாணவர்கள் வராததால் தற்காலிகமாக மூடபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மாணவர்கள் வந்தால் அந்த பள்ளிகள் மீண்டும் திறக்கபடும் எனவும் உறுதி அளித்தார். 
   மாவட்ட ஆட்சிதலைவரை சந்தித்த பின்னர் வெளியில் வந்த ஆ.ராசாவிடம் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது: மூடபட்ட பள்ளிகளை திறக்க வேண்டும் என கிராம மக்கள் தன்னிடம் கோரிக்கை வைத்ததாகவும், அதனால் மாவட்ட ஆட்சிதலைவரை சந்தித்து மீண்டும் திறக்க வலியுறுத்தியதாகவும் கூறினார். அப்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை பிரச்சனை குறித்து கேட்ட போது: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கி விட்டதாகவும் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்றும் கூறினார். மேலும் ஆட்சியை கவிழ்க்க சட்டமன்ற ஊறுப்பினர்களை விலைக்கு வாங்க வேண்டிய அவசியம் திமுகாவுக்கு இல்லை என்று தெரிவித்தார். 

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.