நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்திற்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் தங்களுடைய பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்வதால், பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா தொற்று பரவாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவுறுத்தலின்படியும், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மனோரஞ்சிதம் வழிகாட்டுதல்படியும் பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன் தலைமையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
மேலும், பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அதிநவீன தானியங்கி கிருமி நாசினி இயந்திரமும், காற்றை சுத்தப்படுத்தும் இயந்திரமும் அமைக்கப்பட்டுள்ளது.
இத்துடன் பேரூராட்சிக்குள்பட்ட அனைத்து பகுதிகளிலும் தானியங்கி கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தின் மூலம் கரோனா தொற்று பரவாமல் இருக்க கிருமி நாசினி தெளிக்கப்படுவதுடன் முகக்கவசம் அணிதல், கை கழுவுதல், தகுந்த இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை கடைப்பிடிக்க ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. இப்பணிகள் சுகாதாரஆய்வாளர் ரஞ்சித் மேற்பார்வையில் நடைபெறுகிறது.