நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்குச் சொந்தமான 700 கடைகள் உள்ளன. இந்த கடைகள் குறைந்த வாடகைக்கு விடப்படுகிறது. இருந்தபோதிலும் ஓர் ஆண்டு காலமாக கடை வியாபாரிகள் முறையாக வாடகை செலுத்தாமல் இருந்தனர்.
மேலும், பல்வேறு கடைகள் தனியாரிடம் உள் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. ஆனால், அவர்களிடம் குன்னூர் நகராட்சிக்கு வாடகை செலுத்தச் சொல்லி பலமுறை அறிவித்தும் பணம் செலுத்தாததால் நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக குன்னூர் மார்கெட்டில் உள்ள 10 கடைகளுக்குச் சீல் வைத்தனர். இச்சம்பவம் வியாபாரிகளின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:
தொகுப்பு வீடுகளின் பணியை முடித்து அடிப்படை வசதி அமைக்க பழங்குடியினர் கோரிக்கை