குன்னூர் நகராட்சிக்குட்பட்ட மார்கெட்டில் இறைச்சிகடைகள் அதிகளவில் உள்ளன. கடைகளுக்குள் தொங்கவிடப்பட்டுள்ள இறைச்சியை, எலிகள் கடித்து உண்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் தலைமையில், நகராட்சி அலுவலர்கள் அதிரடியாக ஆய்வு செய்தனர். அப்போது சுகாதாரமற்ற முறையில் இறைச்சிகள் இருப்பதும் அங்கு எலிகள், நாய்கள் உலா வருவதும் தெரியவந்தது. இதன் அடிப்படையில் அலுவலர்கள், அங்கிருந்த ஐந்து கடைகளில் இரண்டு லட்சம் மதிப்பிலான மாட்டிறைச்சிகளை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 700 கிலோ இறைச்சிகளை லாரிகளில் ஏற்றிச்சென்று குப்பை குழியில் கொட்டி அழிக்கப்பட்டது. இந்த சம்பவம் குன்னூரில் உள்ள மாமிச பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.