ETV Bharat / state

கோவிட் உமன் வாரியர்ஸ்... பழங்குடியின மக்களின் நலனுக்காக தினமும் 12 கி.மீ., நடந்த ஆசிரியருக்கு மத்திய அரசு விருது! - coonoor Anganwadi teacher

நீலகிரி: கரோனா காலத்தில் நாள்தோறும் 12 கி.மீ., தொலைவு நடந்து சென்று ஊட்டச்சத்து உணவுகளை வழங்கிய குன்னுார் அங்கன்வாடி ஆசிரியருக்கு மத்திய அரசு  விருது வழங்கி கௌரவித்துள்ளது.

நீலகிரி
நீலகிரி
author img

By

Published : Feb 3, 2021, 8:49 AM IST

Updated : Feb 3, 2021, 9:04 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னுார் அருகே காட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் அங்கன்வாடி ஆசிரியர் வெண்ணிலா (40). இவர் கரோனா ஊரடங்கு காலத்தில், பழங்குடியின கிராமங்களான புதுக்காடு, கீழ் சிங்காரா பகுதிகளில் தினமும் 12 கி.மீ., தொலைவு நடந்து சென்று பழங்குடியின மக்களுக்கு ஊட்டச்சத்து உணவுளை வழங்கி வந்துள்ளார்.

கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பெண்களுக்கு மத்திய அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது. அதில் தமிழ்நாடு அளவில் இவரின் சேவையை பாராட்டி, தேசிய மகளிர் ஆணையம் சார்பில், "கோவிட் உமன் வாரியர்ஸ் - ரியல் ஹீரோயிஸ்" என்ற விருதினை டெல்லியில் வழங்கியது. இந்த விருதினை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா வழங்கினார். ஆசிரியர் வெண்ணிலாவுக்கு அப்பகுதியில் உள்ள மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

'சேவை செய்வதே என்னுடைய விருப்பம்' - ஆசிரியர் வெண்ணிலா

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழங்குடியின மக்கள், வடமாநில தொழிலாளர்களுக்கு வனப்பகுதி வழியாக சென்று தொடர்ந்து சேவை செய்வதே தன்னுடைய விருப்பம் என வெண்ணிலா ஈடிவி பாரத் ஊடகத்திடம் தெரிவித்தார்.

Last Updated : Feb 3, 2021, 9:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.