நீலகிரி: குன்னூரில் உள்ள ராணுவப் பயிற்சி கல்லூரியில் 77ஆவது பட்டமளிப்பு விழாவில் பயிற்சி முடித்த ராணுவ அலுவலர்களுக்கு ராணுவப்பயிற்சி கல்லூரியின் தலைவர் Lt.Gen.மோகன் பட்டங்கள் மற்றும் கேடயம் வழங்கினார். இதில் இந்தியா ராணுவத்தில் உள்ள தரைப்படை, கடற்படை, விமானப்படை என முப்படைகளைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் சர்வதேச நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியோ, வங்கதேசம், கென்யா, மற்றும் பிரிட்டன் போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவ அலுவலர்களுக்கு, ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் ஒரு பகுதியாக இன்று(ஏப்.16) ரானுவ பயிற்சி முடித்த இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500 ராணுவப் பயிற்சி முடித்த அலுவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கிய ராணுவ பயிற்சி கல்லூரி தலைவர், Lt.Gen மோகன் செய்தியார்களிடம் பேசுகையில், “உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து ராணுவ அலுவலர்கள் இங்கு வந்து பயிற்சி பெற்று செல்கின்றனர்.
இந்தியாவின் தலை சிறந்த முப்படை ராணுவப் பயிற்சி கல்லூரி என்றால் குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரி தான். ஒருங்கிணைந்த இந்தியாவாக இருந்தபோது இந்த ராணுவப் பயிற்சி கல்லூரி பாகிஸ்தான் கொயிட்ட மாவட்டத்தில் செயல்பட்டு வந்தது. சுதந்திரம் பெற்ற பின் நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டனுக்கு மாற்றப்பட்டது” எனக் கூறினார்.
இதையும் படிங்க: குன்னூர் - உதகை இடையே வார இறுதிநாட்களில் சிறப்புரயில் இயக்கம்!