நீலகிரி: கோத்தகிரி பகுதியில் நாளுக்கு நாள் கரடிகளின் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக பகல் நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளிலும் தேயிலைத் தோட்டங்களிலும் உலா வருவதால் கிராம மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்நிலையில், கீழ்கோத்தகிரி அகநாடு எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரிந்த கரடி ஒன்று நள்ளிரவு நேரத்தில் கிணற்றில் விழுந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த வனத் துறையினர் கிணற்றுக்குள் ஏணிகளை வைத்து கரடியை ஏறிவரச் செய்தனர். ஏணியில் ஏறி மீண்டுவந்த கரடி அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.
இதையும் படிங்க: கோத்தகிரியில் கரடி உலா - மக்கள் அச்சம்