ETV Bharat / state

Video: வளர்ப்புப் பூனையை கவ்விச் செல்லும் 2 சிறுத்தைகள்

நீலகிரி பகுதியில் வளர்ப்புப் பூனையை 2 சிறுத்தைகள் கவ்விக் கொண்டு செல்லும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

leopards
வளர்ப்புப் பூனையை கவ்வி செல்லும் 2 சிறுத்தைகள்
author img

By

Published : Jan 9, 2023, 3:46 PM IST

வளர்ப்புப் பூனையை கவ்விச் செல்லும் 2 சிறுத்தைகள்

நீலகிரி: மஞ்சூர், குந்தா உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள வனங்களில் சிறுத்தை, யானை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகமாக வசித்து வருகின்றன. அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக குடியிருப்புப் பகுதிகளுக்கு சிறுத்தைகள் வருவது வழக்கம்.

இந்நிலையில் குந்தாப் பாலம் மேல் முகாம் பகுதியில் பாபு என்பவரின் வீட்டின் அருகே இரவு நேரத்தில் உலா வந்த 2 சிறுத்தைகள், அங்கிருந்த வளர்ப்பு பூனையை தூக்கிச் சென்ற காட்சியை, அவ்வழியாக ஜீப்பில் பயணித்த பயணிகள், தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அது தற்போது வைரல் ஆகி வருகிறது. வனத்துறையினர் சிறுத்தைகளின் நடமாட்டத்தைக் கவனித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல் தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.