தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், அறுவடைக்கு தயாரான குறுவை பயிர்கள் சாய்ந்துள்ளன.
அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்ற விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொள்முதல் நிலையம் மூடி கிடப்பதால் மழையில் நனைந்த நெல்லை சாலையில் கொட்டி உளர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அரசு உடனடியாக விவசாயிகளின் நிலையறிந்து கொள்முதல் நிலையத்தை திறந்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். அறுத்த நெல்லை கடந்த 10 தினங்களுக்கு மேலாக பாதுகாக்கவே பாடுபட வேண்டியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ’ரோப் கார் வந்தா எங்க வாழ்வாதாரம் பறிபோகும்’