தஞ்சை மாவட்டம் திருவையாறு ஓடத்துறை ரோட்டைச் சேர்ந்தவர் மணிகண்டன் (40). கூலி வேலை செய்துவரும் இவருக்குத் திருமணமாகி பரமேஸ்வரி என்ற மனைவியும், பிரியா (10), கார்த்திகா (5) என்ற இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர்.
நேற்று (டிச. 10) கார்த்திகா வீட்டிலிருந்து பிரதான சாலையில் உள்ள கடைக்கு பொருள்கள் வாங்க சாலையோரத்தில் நின்றுகொண்டிருக்கும்போது திருவையாறிலிருந்து தஞ்சை நோக்கிச் சென்ற கார் எதிர்பாராதவிதமாக கார்த்திகா மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கார்த்திகா உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த திருவையாறு காவல் ஆய்வாளர் செந்தில்குமார், காவல் உதவி ஆய்வாளர் ஞானமுருகன், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து கார்த்திகா உடலைக் கைப்பற்றி திருவையாறு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
இது சம்பந்தமாக கார்த்திகாவின் தாத்தா பஞ்சாபகேசன் (60) கொடுத்த புகாரின்பேரில் திருவையாறு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: வருங்கால முதல்வர் ரஜினி: ஆடித்தீர்க்கும் ரசிகர்கள்!