ETV Bharat / state

"பள்ளிகள் பாதுகாப்பில் நிரந்த ஊழியர்களை நியமிக்க வேண்டும்"-பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை - SCHOOLS MUST EMPLOY SECURITY STAFF

அரசுப் பள்ளிகளில் சமூக விரோதிகள் நுழைவதை தடுக்கும் பாதுகாவலர் உள்ளிட்ட ஆசிரியர் அல்லாத பணியிடங்களை உருவாக்கி ஊழியர்களை நியமிக்க வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை விடுத்துள்ளது.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு
பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு (Image credits-Etv Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2024, 6:36 PM IST

சென்னை: அரசுப் பள்ளிகளில் சமூக விரோதிகள் நுழைவதை தடுக்கும் பாதுகாவலர் உள்ளிட்ட ஆசிரியர் அல்லாத பணியிடங்களை உருவாக்கி ஊழியர்களை நியமிக்க வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணி புரிந்த ஆசிரியர் பள்ளி வளாகத்தில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறைக்கு இந்தச் சம்பவம் மிகப் பெரும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு உரிய சட்டப்படியான நிவாரணம் கொலையுண்ட ஆசிரியருக்கு வழங்க வேண்டும். அரசுப் பள்ளியில் பணியில் இருந்தபோது, அரசுப் பள்ளி வளாகத்தில் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி ஒரு ஆசிரியர் இறந்துள்ளார்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 14ன் படி, அரசுப் பணியில் இருக்கும்போது உயிர் இழந்துள்ள ஆசிரியர், நிரந்தர ஊழியரா? அல்லது தற்கால ஊழியரா? என்ற பாகுபாடு பார்க்கப்படாமல், அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது இறந்தால், இறந்த‌‌ ஊழியருக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் கிடைக்கக் கூடிய சட்டப் படியான அனைத்து உரிமைகளும் இறந்த ஆசிரியருக்கு வழங்கப்பட வேண்டும்.

இதையும் படிங்க: யானைகளை காக்கும் ஏ.ஐ. கேமராக்கள்... தமிழக வனத்துறையின் புதிய முயற்சியால் ரயில் விபத்தில் விலங்குகள் உயிரிழப்புக்கு முற்றுப்புள்ளி!

பள்ளி வளாகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பள்ளிக் கல்வித் துறை நிரந்தர ஊழியராக, பள்ளிக்கு ஒரு காவலர் இருந்திருந்தால், பள்ளிக்குத் தொடர்பில்லாத வெளி மனிதர்கள், பள்ளி வளாகத்திற்குள் நுழைவதைத் தடுத்திருக்க முடியும். குழந்தைப் பருவ‌ மாணவர்களைக் கையாளும் பயிற்சியும் பக்குவமும் பெற்ற நபர்கள் பள்ளிக் கல்வித் துறை ஊழியர்களாக நிரந்தரப் பணியில் அமர்த்த வேண்டும்.

தற்காலிக மற்றும் ஒப்பந்த‌ ஊழியர்களால் மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது. பணிச் சுமை, ஊதியப் பற்றாக் குறை, ஒப்பந்த நிறுவனம் தரும் நெருக்கடி உள்ளிட்ட பல காரணிகளால் ஊழியர்களுக்கு மன அழுத்தம் ஏற்படலாம், மன அழுத்தத்திற்கு உண்டான ஊழியரால் மாணவர்கள் பாதிக்கப்படலாம் . ஒவ்வொரு பள்ளிக்கும் தேவையான ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத நிரந்தரப் பணியிடங்கள் உருவாக்கி, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் நிரப்பப்பட வேண்டும்,"எனக் கூறப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.