ETV Bharat / state

"ரஜினி-சீமான் சந்திப்பின் பின்னணி என்ன?"- மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் கருத்து! - SEEMAN AND RAJINI MEETING

ரஜினி, சீமானுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்பதே என்னுடைய கருத்தாக இருக்கிறது என மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

ரஜினி - சீமான் சந்திப்பு
ரஜினி - சீமான் சந்திப்பு (Credits - Saattaidurai X Page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2024, 5:56 PM IST

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் சீமான் கூறுகையில், "இது அன்பின் நிமித்தமான சந்திப்பு தான். இதில் திரையுலகம், அரசியல் குறித்து விவாதித்தோம்.

ரஜினிகாந்த் நிம்மதியாக நல்ல, நல்ல படங்களை நடித்து கொண்டிருக்கிறார். என்னை விட அனுபவம் வாய்ந்தவர். அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு. இது ரஜினியின் மனநிலைக்கு சரிபட்டு வராது என்று தான் முன்பு அவரை விமர்சித்தேன்.

இந்த களத்தில் நேர்மையாக இருப்பது மிகவும் கடினம். ஓர் ஆட்சியாளர் சிறப்பாக ஆட்சி செய்யும் போது மக்கள் அந்த ஆட்சியைக் கொண்டாடுவார்கள். இதைத்தான் ரஜினி 'சிஸ்டம் சரியில்லை' என்று கூறியிருந்தார். நாடும், மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அரசியல் ஆர்வம் நிச்சயம் இருக்கும். ரஜினிகாந்தை சந்தித்து பேசியிருப்பதும் அரசியல் தான்" என தெரிவித்திருந்தார். தற்போது இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது.

இவர்கள் சந்திப்பு குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ப்ரியன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "அரசியலுக்கு வருவதாக கடந்த 25 வருடங்களாக சொல்லி தன்னுடைய ரசிகர்களை ஏமாற்றிய ரஜினிகாந்த் தன்னுடைய உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரவில்லை என்று கூறியிருந்தார். அரசியல் நிகழ்வுகளில் சமீபத்தில் ஒதுங்கியும் இருந்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன், திமுக அமைச்சரின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் மூத்தவர்கள் இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்ற சர்ச்சைக்குரிய கருத்தையும் சொல்லி பேசிப் பொருளான நிலையில் அதற்கு எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்தது.

சமீபத்தில், அரசியல் குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு 'நோ கமெண்ட்' என்று ரஜினிகாந்த் பதிலளித்து வருகின்றார். இந்நிலையில் சீமான் - ரஜினிகாந்த் சந்திப்பு போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. சீமானை குறித்து சொல்ல வேண்டுமென்றால் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பாக தம்பி கட்சியை தொடங்குகிறார் என ஆதரவாக பேசி வந்த நிலையில், அரசியல் கட்சி தொடங்கிய விஜய் தமிழ் தேசியமும், பெரியாரும் எனது இரு கண்கள் என தெரிவித்த நொடியில் இருந்து சீமான் விஜயை எதிர்க்க தொடங்கினார்.

சீமான் கடுமையாக விமர்சனமும் செய்து இருந்தாலும் சீமானின் பிறந்தநாளுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார். சமீப காலமாக, சீமானுடைய கட்சியும் ஆட்டம் காண தொடங்கி இருக்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட தலைவர்கள் நாதக கட்சியில் இருந்து வெளியேறி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். சிலர் விஜய் கட்சியிலும் இணைந்து வருகின்றனர். 8 சதவீத ஓட்டை சேர்த்து வைத்தது, கையை விட்டு போய் விடுமோ என்ற அச்சமும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் தான் சீமான் - ரஜினிகாந்தை சந்தித்து இருக்கிறார். சீமானுடைய பிறந்தநாளன்று இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பில் அரசியல் பேசப்பட்டு இருக்கலாம். ஆனால் சந்திப்பு என்பது சீமான் ஊடகத்தில் தன்னை குறித்து விவாதம் வரவேண்டும் என்பதற்கான சந்திப்பாகவே இது தெரிகிறது.

இந்த சந்திப்பு அரசியலில் எந்த மாற்றமும் நிகழாத ஒரு சந்திப்பாக இருக்கிறது. ஏனென்றால் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் ரஜினியும், விஜய்யும் ஒருவரை ஒருவர் மாறி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதால் விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் எதிர்மறை கொள்கைகள் இருப்பதால் சீமான் ரஜினியுடன் ஒரு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளலாம் என்ற கோணத்திலும் இந்த சந்திப்பு நடைபெற்று இருக்கலாம்.

இதையும் படிங்க : ரஜினி - சீமான் திடீர் சந்திப்பு! உறுதிசெய்த சாட்டை துரைமுருகன்

இந்த சந்திப்பு முழுக்க, முழுக்க சீமான் தன்னை வெளிப்படுத்தி காட்டிக் கொள்வதற்காக மட்டுமே நடைபெற்ற சந்திப்பாக இருக்கிறது. ரஜினி- சீமானுக்கு ஆதரவு தெரிவிக்கவும் மாட்டார். ஏனென்றால் இருவரும் எதிர்மறை கருத்துக்களை உடையவர்கள். சமீப காலமாக எதிர்மறை கருத்துக்களில் சிக்கி வரும் சீமானுக்கு இந்த சந்திப்பு ஒரு பாசிட்டிவாக அமையலாம் என்பதே என்னுடைய கருத்தாக இருக்கிறது. இந்த சந்திப்பு மூலமாக ரஜினி - சீமானுக்கு அரசியல் ரீதியாக ஆதரவு தெரிவிப்பதற்கான எந்த சூழலும் இல்லை.

எனவே, சீமான் தன்னை தலைப்பு செய்தியாக்கிக் கொள்ளவே, இந்த சந்திப்பு நடைபெற்று இருக்கிறது. மேலும் ஒரு துறை சார்ந்தவர்கள் சினிமா துறையை சார்ந்தவர்கள் என்பதால் ரஜினி சான்றோர்களாக இருந்தாலும் இருவரும் வெவ்வேறு கருத்துக்களை உடையவர்களாகவே பயணித்து வருகின்றனர். எனவே, அரசியல் ரீதியாக ஒருவருக்கொருவர் ஆதரவு தெரிவித்துக் கொள்வதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜயும், சீமானுமே முக்கிய போட்டியாளர்களாக இல்லை. முக்கிய போட்டியாளர்கள் என்பது திமுகவும், அதிமுகவும் மட்டுமே.

அதிமுக சற்று பலவீனமாக இருந்தாலும் 20% மேல் தங்களுடைய வாக்கு சதவீதத்தை வைத்துள்ளனர். எனவே விஜயும், சீமானும் சப்ஸ்டியூட்டாக மட்டுமே களத்தில் இருப்பார்கள். குறிப்பாக, விஜய்க்கு எத்தனை சதவீதம் ஓட்டு உள்ளது என்பது கூட தெரியாது. எனவே, இப்படி இருக்கும் சூழலில், ரஜினி யாருக்கும் ஆதரவையும் தன்னுடைய கருத்தை தெரிவிக்க மாட்டார். இந்த சந்திப்பானது சீமானுக்கான சந்திப்பாகவே பார்க்கப்படுகிறது. அரசியலுக்கு வருவதாக தெரிவித்த ரஜினி அரசியலுக்கு வரவில்லை. எனவே, ரஜினி - சீமானுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்பதே என்னுடைய கருத்தாக இருக்கிறது" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.