ETV Bharat / state

மாணவனை காலைப் பிடித்து விடச் சொன்ன ஆசிரியர் சஸ்பென்ட்...வீடியோ வைரல் ஆன நிலையில் கல்வித்துறை நடவடிக்கை! - TEACHER SLEEPING IN CLASSROOM

சேலம் மாவட்ட அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர் ஒருவர் தரையில் அமர்ந்தபடி ஆசிரியரின் கால்களை பிடித்து விடும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மாணவனை காலை பிடித்து விடச் சொல்லி உறங்கும் ஆசிரியர்
மாணவனை காலை பிடித்து விடச் சொல்லி உறங்கும் ஆசிரியர் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2024, 6:38 PM IST

சேலம் : சேலம் மாவட்ட அரசுப்பள்ளியில் மாணவர் ஒருவர் தரையில் அமர்ந்தபடி ஆசிரியரின் கால்களை பிடித்து விடும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் தாலூகாவிற்கு உட்பட்ட கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கிழக்கு ராஜாபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 90க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதையும் படிங்க : குறைதீர் கூட்டத்தில் கலெக்டரை ராஜினாமா செய்ய சொன்ன விவசாயிகள்.. விருதுநகரில் பரபரப்பு..!

இதனிடையே பள்ளியில் பணியாற்றி வரும் காமக்காபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கணக்கு ஆசிரியர் ஜெயபிரகாஷ், மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதோடு, மாணவர்களுக்கு முறையாக பாடம் எடுக்காமல் வகுப்பறையிலே தூங்குவதாக மாணவர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், ஆசிரியர் இருக்கையில் அமர்ந்திருக்க மாணவர் ஒருவர் தரையில் அமர்ந்தபடி ஆசிரியரின் கால்களை பிடித்து விடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

இந்த விவகாரம் வைரல் ஆனதை அடுத்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், கணித ஆசிரியர் ஜெயப்பிரகாசை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.