ETV Bharat / state

சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அதிமுக துணை செயலாளர்! - Stir by the poster sticker

தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளியில் சசிகலாவை வரவேற்று அதிமுக துணை செயலாளர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியவரால் பரபரப்பு!

author img

By

Published : Jan 30, 2021, 1:13 PM IST

திருக்காட்டுப்பள்ளி பேருந்து நிலையத்தில் அதிமுக தஞ்சை வடக்கு மாவட்டம் பூதலூர் வடக்கு ஒன்றிய திருக்காட்டுப்பள்ளி பேரூர் கழகத்தின் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் சரவணன் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டி உள்ளார்.

அதில் 33 ஆண்டு காலமாக டாக்டர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு தோழிக்குத் தோழியாக, தாய்க்குத் தாயாக இருந்த அஇஅதிமுக கழக நிரந்தர பொதுச் செயலாளர் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களே வருக... வருக... வானம் ஒன்று தான், வையகம் ஒன்று தான், கழகத்தின் வானமே, வையகமே, ஏழாம் முறையென்ன ஏழேழு தலைமுறைக்கும் எங்களின் தலைமையே வருக வருக போன்ற வாசகங்கள் போஸ்டரில் இடம் பெற்றுள்ளன.

இதுபோல திருக்காட்டுப்பள்ளியின் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சசிகலா விடுதலையும், அதிமுக வரவேற்பு போஸ்டரும்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.