ETV Bharat / state

இளம் பெண் சாவில் மர்மம் -  பெற்றோர், உறவினர் சாலை மறியல்!

தஞ்சாவூர்: திருமணமான இளம்பெண் இறப்பில் மர்மம் இருப்பதாக பெண்ணின்பெற்றோர் புகார் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

mystery
author img

By

Published : Sep 7, 2019, 6:59 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள உத்திரை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் மாற்றுத் திறனாளி ஆவார். இவருக்கும் திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்த ரேகா என்பவருக்கும், கடந்த 2017ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், ரேகா குடும்ப பிரச்னை காரணமாக நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கண்ணன் வீட்டில் இருந்து ரேகாவின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, ரேகாவின் தந்தை சுப்ரமணி தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் ஆய்வாளர் நாகலட்சுமி உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

thanjavur  women suicide  தஞ்சாவூர்  இளம்பெண் தற்கொலை
தற்கொலை செய்த பெண்ணின் உறவினர்கள்

திருமணமாகி இரண்டு வருடங்களே ஆனதால் இதுகுறித்து கோட்டாட்சியர் வீராசாமி விசாரணை மேற்கொண்டு வருகின்றார். கடந்த நான்கு நாட்களுக்கு முன் கண்ணன், ரேகா தம்பதியின் ஆண் குழந்தைக்கு காது குத்தும் விழா நடைபெற்றது. அப்போது, ரேகாவின் பெற்றோர் அரை சவரன் நகை மட்டுமே வழங்கியதாகவும், எதிர்பார்த்த அளவிற்கு சீர் வரிசை செய்யவில்லை எனக் கூறி பிரச்னை எழுந்ததாகக் கூறப்படுகிறது.

பணத்திற்காக ரேகாவை கொலை செய்து விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கண்ணனின் பெற்றோர், உறவினர்கள் நாடகமாடுவதாகக் கூறி அரசு மருத்துவமனை முன்பு, ரேகாவின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். மேலும் கும்பகோணம் கோட்டாட்சியர் வாகனத்தை முற்றுகை இட்டனர். இதையடுத்து சுவாமிமலை காவல் நிலைய ஆய்வாளர் நாகலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இளம்பெண் மர்ம மரணம் - உறவினர்கள் சாலை மறியல்

இச்சம்பவம் தொடர்பாக கண்ணன் அவரது தந்தை வடிவேலு, தாய் கோமதி, தங்கை சுகந்தி ஆகியோரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரேகாவின் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:தஞ்சாவூர் செப் 06

திருமணமாகி இரண்டுவருடங்கள் ஆனஇளம்பெண் தூக்கிட்டுதற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவரது சாவில் மர்மம்இருப்பதாக பெண்ணின்பெற்றோர் புகார் தெரிவித்து சாலை மறியலில் Body:. .
 
தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணம் அருகே உத்திரை கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளியான கண்ணன்என்பவருக்கும், திருப்பனந்தாள் பகுதியைச் சேர்ந்த ரேகாஎன்பவருக்கும், கடந்த2017 ஆம் ஆண்டுஇருவீட்டார்சம்மதத்துடன் திருமணம்நடைபெற்றது.
 
இந்நிலையில் குடும்பபிரச்சினை காரணமாகநேற்றிரவு ரேகாதூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்டதாககண்ணன் வீட்டில்இருந்து பெண்வீட்டாருக்கு தகவல்கொடுக்கப்பட்டது.
 
இந்நிலையில்பெண்ணின் தந்தை சுப்ரமணி தனது மகளின்மரணத்தில் மர்மம்இருப்பதாக சுவாமிமலைகாவல் நிலையத்தில்புகார் அளித்துள்ளார்.
 
புகாரின் அடிப்படையில்சம்பவ இடத்திற்குசென்ற காவல் ஆய்வாளர் நாகலட்சுமிஉடலை கைப்பற்றிபிரேதபரிசோதனைக்காககும்பகோணம் அரசுதலைமைமருத்துவமனைக்குஅனுப்பி வைத்தார். திருமணமாகி இரண்டுவருடங்களே ஆனதால்இதுகுறித்துகோட்டாட்சியர் வீராசாமிவிசாரணை நடத்திவருகிறார்.
 
கடந்த நான்கு நாட்களுக்கு முன் கண்ணன், ரேகா தம்பதியின் ஆண் குழந்தைக்கு காது குத்தும் விழா நடைபெற்ற போது, ரேகா வீட்டார் அரை சவரன் மட்டுமே வழங்கியதாகவும், எதிர்பார்த்த அளவிற்கு சீர் வரிசை செய்யவில்லை எனவும் கூறி பிரச்சினை எழுந்ததாகக் கூறப்படுகிறது.
 
இதனால் ரேகாவை கொலை செய்து விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என கண்ணனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நாடகமாடுவதாகக் கூறி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
 
மேலும் கும்பகோணம் கோட்டாட்சியர் வாகனத்தையும் அவர்கள் முற்றுகையிட்டதால் பதற்றம் மேலும் அதிகரித்தது.
 
இதையடுத்து சுவாமிமலை காவல் நிலைய ஆய்வாளர் நாகலட்சுமி பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
 
இச்சம்பவம் தொடர்பாக கண்ணன் அவரது தந்தை வடிவேலு, தாய் கோமதி, தங்கை சுகந்தி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.