ETV Bharat / state

17ஆவது நாளாக நீடிக்கும் விவசாயிகளின் போராட்டம் - Thanjavur

திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று 17ஆவது நாளாக தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

17 நாட்களாக நீடிக்கும் திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு எதிரான நூதன போராட்டம்

author img

By

Published : Dec 16, 2022, 8:59 PM IST

17 நாட்களாக நீடிக்கும் திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு எதிரான நூதன போராட்டம்

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே கபிஸ்தலம் காவல் சரகம் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 400 கோடி ரூபாய் தொகையை உடனடியாக திருப்பி வழங்க வலியுறுத்தி கடந்த 17 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று கரும்பு விவசாயிகள் கண்களில் கருப்புத்துணி கட்டி போராட்டம் தொடர்ந்து வருகின்றனர்.

திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலைக்கு கரும்பு விவசாயிகள் அரவைக்கு அனுப்பிய கரும்புக்கான நிலுவை தொகை ரூ.100 கோடியையும், பல்வேறு விவசாயிகள் பெயரில் பல வங்கிகளில் ரூ.300 கோடியை இந்த ஆலை கடனாக பெற்று இருந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு திருஆரூரான் சர்க்கரை ஆலை மூடப்பட்டது.

இதனையடுத்து இந்த சர்க்கரை ஆலையை கால்ஸ் டிஸ்லரிஸ் என்ற நிறுவனம் சமீபத்தில் ஏலத்தில் எடுத்துள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு அரவைக்கான நிலுவைத் தொகை ரூ.100 கோடியையும், விவசாயிகள் பெயரில் பல்வேறு வங்கிகளில் பெற்ற ரூ.300 கோடி கடனையும் உடனடியாக திருப்பி வழங்க கோரி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிதாக பொறுப்பு எடுத்துக் கொண்ட கால்ஸ் டிஸ்லரிஸ் நிறுவனம் கரும்புக்கான நிலுவைத் தொகையில் 57 சதவீதத்தை மட்டும் எங்களால் தர இயலும் என்றும், பல்வேறு வங்கிகளில் திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் வாங்கிய கடனுக்கு தாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கரும்பு விவசாயிகள் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை முன்பு கடந்த 17 நாட்களாக தங்கள் வீடு, மனைவி, மக்களை விட்டு விட்டு தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஆலை முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு அங்கேயே சமையல் செய்து உண்டு, உறங்கி போராடி வருகின்றனர்.

தற்போது 17வது நாள் போராட்டமாக கரும்பு விவசாயிகளை கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசை கண்டித்தும், முன்னாள் கரும்பு ஆலை நிர்வாகங்களை கண்டித்தும் கண்களில் கருப்புத்துணி கட்டி நூதன ஆர்ப்பாட்டம் செய்து காத்திருப்பு போராட்டத்தை 17வது நாளாக தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நெய்யூர் அருகே ரயில் தண்டவாளத்தில் கவிழ்ந்த மினிவேன் - உயிர் தப்பிய குடும்பம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.