ETV Bharat / state

தஞ்சையில் 3,000 மரக்கன்றுகள் நடும் விழா - தொடங்கிவைத்த ஆட்சியர் - தஞ்சாவூர், திட்டை கிராம், 3,000 மரக்கன்றுகள் நடும் விழா, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை

தஞ்சாவூர்: திட்டை கிராம பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற 3,000 மரக்கன்றுகள் நடும் விழாவை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தொடங்கிவைத்தார்.

3000-trees-in-thanjavur
author img

By

Published : Sep 8, 2019, 9:50 AM IST

தஞ்சாவூர், திட்டை கிராமத்தில் நேற்று பொதுமக்கள் சார்பில் 3,000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை விழாவை தொடங்கிவைத்தார்.

பின்னர் பேசிய அவர், "இன்றைய காலத்தில் நீரை சேமித்து வைக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் உள்ளோம். ஊரகப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் கிராமங்களில் மரங்கன்று நடுதல், நீர்நிலைகளை சுத்தப்படுத்துதல் போன்ற செயல்களில் தாமாக முன்வந்து ஈடுபடுவது, பிறருக்கு முன்னுதாரணமாக மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினருக்கும் மிகப்பெரிய பலனை அளிக்கும்.

நீர் மேலாண்மைக்காக மத்திய அரசு ஜல்சக்தி அபியான் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி ஏரி, குளம், குட்டை, கால்வாய் போன்றவைகளை தூர்வாரிவருகிறது" எனத் பேசினார்.

Intro: தஞ்சாவூர் செப் 07

திட்டை கிராமத்தில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழா நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் .ஆ.அண்ணாதுரை ., துவக்கி வைத்தார்Body:

தஞ்சாவூர் மாவட்டம,; திட்டை கிராமத்தில் இன்று(07.09.2019) நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழா நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் அண்ணாதுரை துவக்கி வைத்தார்.
திட்டை முத்துமாரியம்மன் திருக்கோயில் அருகில் திட்டை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் 3000 மரக்கன்றுகள் நடும் விழா நிகழ்ச்சி இன்றுநடைபெற்றது.
மரம் நடும் விழா நிகழ்ச்சியை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது:-
இன்றைய காலகட்டத்தில் நீரை சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் அனைவரும் உள்ளோம். மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து ஜல்சக்தி அபியான் எனப்படும் நீர் மேலாண்மை இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏரி, குளம், கால்வாய், வாய்க்கால் தூர்வாருதல், மரக்கன்றுகளை நடுதல், தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல், மழைநீரை சேமித்தல், நிலத்தடி நீரை உயர்த்துதல் ஆகியவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. ஊரக பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் கிராமங்களில் மரக்கன்றுகளை நடுதல், நீர்நிலைகளை சுத்தப்படுத்துதல் ஆகிய செயல்களில் தாமாக முன்வந்து ஈடுபடுவது பிறருக்கு முன்னுதாரணமாக அமைவது மட்டுமல்லாமல் எதிர்கால சந்ததியினருக்கும் மிகப்பெரிய பலனை அளிக்கும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கரந்தை தமிழ்ச்சங்க செயலாளர் .இராமநாதன், கரந்தை தமிழ்ச்சங்க நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் திட்டை கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Conclusion:Tanjore sudhakaran 9976644011

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.