தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள வெட்டுவாக்கோட்டை கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் தனியார் கட்டடத்தில் நீண்ட வருடங்களாக செயல்பட்டுவருகிறது. தனியார் இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் இயங்கிவருவதால் முறைகேடுகள் நடந்துவருவதாக கூறப்படுகிறது.
இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொள்முதல் நிலையத்தை அரசுக்கு சொந்தமான இடத்திற்கு மாற்றவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக விவசாயிகள் அறிவித்தனர்.
இதையடுத்து காவல் துறையினர், உணவுத் துறை அலவலர்கள் விவசாயிகளிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தியதன்பேரில் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். இக்கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: மாவட்டத்திற்கு ஒரு ஏஜென்ட் வைத்து தேர்வு முறைகேடு - ஜெயக்குமார் வாக்குமூலம்!