தஞ்சாவூர் அரண்மனை மைதானத்தில் இன்று புத்தகத் திருவிழாவை வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமை வகித்த இவ்விழாவில் மாநிலங்களை உறுப்பினர் வைத்தியலிங்கம் சிறப்புரையாற்றினார்.
இந்த புத்தகத் திருவிழாவில் 101 அரங்குகளில் 75 புத்தகப் பதிப்பாளர்கள் தங்களுடைய புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவில் ஐந்து வயது குழந்தை முதல் முதியோர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
தஞ்சை மட்டுமல்லாது பிற மாவட்டங்களிலிருந்தும் புத்தக வாசிப்பாளர்கள் இக்கண்காட்சியில் கலந்துகொண்டு புத்தகங்களை வீடுகளுக்கு வாங்கிச் சென்று வருகின்றனர்.