தஞ்சாவூர்: திருவாரூரில் 2019இல் கோட்டாட்சியராக இருந்த முத்து மீனாட்சி இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டார் என்ற புகாரின் பேரில் அவரது திருவாரூர் இல்லம் (தற்போது விழுப்புரம் சர்க்கரை ஆலை மேலாண் இயக்குநராக உள்ளார்) மற்றும் அப்போது திருவாரூரில் பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலர் துர்கா ராணி மற்றும் கிராம நிர்வாக அலுவலக உதவியாளர் கார்த்தி ஆகியோரது வீடுகளிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: தஞ்சாவூரில் பேப்பர் பொறுக்கிய பெண்ணை காலணியால் அடித்த நபர் கைது!
இந்நிலையில், இந்த இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கியதில் முறைகேட்டில் தொடர்புடையவராக கருதப்படும் தற்போது திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தனி வட்டாட்சியராக பணியாற்றி வரும் தேப்பெருமாநல்லூர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராஜன் பாபு வீட்டிலும், தஞ்சை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் இரு வருவாய்த்துறை ஊழியர்கள் முன்னிலையில் பல மணி நேரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தேப்பெருமாநல்லூர் கிராமத்தில் பெரும் பரபரப்பு அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது
இதையும் படிங்க: சாரங்கபாணி சுவாமி கோயிலில் வெகு விமரிசையாக தொடங்கிய சித்திரைப் பெருவிழா!