காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் கஜா புயல் வீசிய பொழுது பெய்த மழைக்குப் பிறகு மழை அறவே பெய்யவில்லை. இதனால் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இந்நிலையில் பருவ மழை பெய்ய வேண்டி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் இன்று வருண ஜபம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்துகொண்டார். மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரதிமோகன், நகரச் செயலாளர் ராம ராமநாதன், ஒன்றியச் செயலாளர் அறிவழகன், கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.