தஞ்சையை அடுத்த நாஞ்சிகோட்டையில் தமிழ்நாடு அரசு விளையாட்டு மேம்பாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு விளையாட்டு உபகரணங்களை இளைஞர்களுக்கு வழங்கியதோடு மட்டுமல்லாமல் தாமும் கிரிக்கெட் விளையாடி உற்சாகத்தை ஏற்படுத்தினார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், "விவசாயிகளுக்கு வேண்டிய தொகுப்புகளையும், நிதியையும் மானியம் வழங்கியதால் இன்றைக்கு விவசாயம் செழித்தோங்கி, விளைச்சல் அதிகமாக இருந்து கொண்டிருக்கிறது. தற்போது அறுவடை நடந்துகொண்டிருக்கிறது.
விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்வதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கையும் அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக வேளாண்மைத் துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது" எனத் தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சரால் விவசாயிகள் மட்டுமல்ல அனைத்து மக்களும் சிறப்பாகவும், செழுமையாகவும் வாழ்வார்கள் என்று பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பொங்கல் தின சிறப்புப் பேருந்து: முன்பதிவில் 10.80 கோடி ரூபாய் வருமானம்