பட்டுக்கோட்டையைச் சேர்ந்த நளன்ராஜன் என்ற யுகேஜி படிக்கும் ஐந்து வயது சிறுவன், ஸ்கேட்டிங்கில் ஆர்வம் உடையவன். இவன் மூன்று வயதில் இருந்து ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வந்தான்.
இந்நிலையில் வேப்பங்குளம் கிராமத்தில் இருந்து, பட்டுக்கோட்டை நகரம் வரை சுமார் 10 கிலோ மீட்டர் துாரம் ஸ்கேட்டிங்கில் பயணம் செய்து, கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டான். இதற்காக அவன் எடுத்து கொண்ட நேரம் 40 நிமிடம் ஆகும். இதை தொடர்ந்து அச்சிறுவனை அதிகாரிகள், பொதுமக்கள் வாழ்த்திப் பாராட்டினர்.
இதையும் படிக்க:வில் அம்பு எய்து டாக்டர் பட்டம் பெற்ற 5 வயது சிறுமி!