ETV Bharat / state

பொங்கல் பண்டிக்கைக்கு கூடுதல் கட்டணமா? இந்த எண்ணில் புகார் கொடுக்கலாம்! - OMNI BUS COMPLAINT NUMBER

பொங்கல் விடுமுறைக்காக செல்லும் பயணிகளிடம் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆம்னி பேருந்து சங்கம் அறிவித்து, அதற்கான புகார் எண்ணை வெளியிட்டுள்ளது.

ஆம்னி பேருந்துகள் - கோப்புப் படம்
ஆம்னி பேருந்துகள் - கோப்புப் படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

Updated : 4 hours ago

சென்னை: ஆம்னி பேருந்துகளில் அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால் 90433 79664 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள தகவலில் கீழ்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓரிரு நாட்களாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் கட்டண சம்பந்தமாக புகார்கள் எழுந்துள்ளது. ஆம்னி பேருந்துகளுக்கு கட்டண நிர்ணயம் இல்லாத போதிலும் பயணிகள் பாதிக்காத வகையில் அரசுக்கும் கெட்ட பெயர் ஏற்படாத வகையிலும் கடந்த 2023 ஆண்டு தீபாவளி பண்டிகை முன்னிட்டு சங்கங்கள் நிர்ணயித்த கட்டணத்தை போக்குவரத்து துறை அமைச்சர் பயணிகளின் நலன் கருதி 20 விழுக்காடு குறைத்து நிர்ணயிக்கமாறு அறிவுறுத்தினார்.

மேலும், வாகனங்களின் உதிரி பாகங்கள் மற்றும் டோல்கேட் கட்டணம் போன்ற பராமரிப்பு செலவுகள் உயர்ந்த போதிலும், 2023-ஆம் ஆண்டு சங்கங்கள் நிர்ணயித்த அதிகபட்ச கட்டணத்தையே அன்றும், இன்றும் நிர்ணயித்து வருகிறோம்.

இதுபோன்ற விழாக் காலங்களில், ஒரு சில பேருந்து உரிமையாளர்கள் செய்யும் தவறுகளால் அனைத்து பேருந்து உரிமையாளர்களுக்கும், இத்தொழில் செய்பவர்களுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் அரசும், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கமும் சேர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

சங்கங்கள் நிர்ணயித்த கட்டணங்கள்

அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பாக ஆன்லைனில் அதிக கட்டணம் போடப்பட்டிருந்த நிறுவனங்களிடம் அறிவுறுத்தி சங்கங்கள் நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக போட வேண்டாம் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அவர்களும் சங்கங்கள் நிர்ணயித்த கட்டணத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகை நாட்களில் யுசிஜி-நெட் தேர்வு நடத்த வேண்டாம்-மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை!

மேலும், ஆம்னி பேருந்துகளில் வசூலிக்க வேண்டிய அதிகபட்ச கட்டண விவரத்தையும் "www.aoboa.co.in" என்ற எங்கள் சங்க இணையதளத்திலும் வெளியிட்டுள்ளோம். அதை பயணிகள் பின்பற்றலாம். மேலும், ஆம்னி பேருந்துகள் கட்டணம் சம்பந்தமான புகார்களுக்கு எங்கள் சங்கத்தின் என்ற 90433 79664 எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

அதிகமான முன்பதிவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் தென்பகுதிகளுக்குச் செல்ல, ஜனவரி 10-ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை இதுவரை ஒரு லட்சத்து 40 ஆயிரத்திற்கு மேற்பட்டப் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரம் ஆம்னி பேருந்துகள் உள்ளன. சென்னையில் இருந்து மட்டும் 2 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகை: எத்தனை சிறப்பு பேருந்துகள்? எந்தெந்த வழித்தடங்கள்?

மேலும், இன்று பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஜனவரி 13-ஆம் தேதி அதிகளவில் பதிவு செய்துள்ளனர். ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை விட அதிகளவில் வசூல் செய்யப்படுவதாக வரப்பெற்ற புகார்கள் குறித்து அந்த ஆம்னி பேருந்து நிறுவனத்திடம் பேசி கட்டணத்தை குறைத்து பயணம் செய்ய அனுமதி அளித்துள்ளோம். நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆம்னி பேருந்துகள் சென்னையில் பயணிகளை ஏற்றிச் செல்வோம்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, பயணிகளுக்கு ஆம்னி பேருந்து பயணக் கட்டணத்தில் ஏதேனும் குழப்பங்கள் இருந்தால் கொடுக்கப்பட்டுள்ள புகார் எண்களை தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம்.

Last Updated : 4 hours ago
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.