ETV Bharat / state

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் எம்எல்ஏ விடுவிக்கப்பட்ட உத்தரவு ரத்து..! - FORMER MLA GNANASEKARAN

சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் எம்.எல்.ஏ ஞானசேகரன் மற்றும் அவரது மனைவியை விடுவித்து வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் எம்.எல்.ஏ ஞானசேகரன், கோர்ட் (கோப்புப்படம்)
முன்னாள் எம்.எல்.ஏ ஞானசேகரன், கோர்ட் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2025, 5:24 PM IST

Updated : Jan 10, 2025, 5:34 PM IST

சென்னை: கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை வேலூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக பதவி வகித்த ஞானசேகரன், வருமானத்திற்கு அதிகமாக 3 கோடியே 15 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோரை வழக்கிலிருந்து விடுவித்து வேலூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2016ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி வேல்முருகன் விசாரித்தார்.

இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை, வருமான வரி கணக்கில் சொத்துக்களை குறிப்பிட்டுள்ளதால், அவை சட்டப்பூர்வமாக சேர்க்கப்பட்ட சொத்துக்களாக கருத முடியாது என்றும் முன்னாள் எம்எல்ஏவின் மனைவிக்கு தனிப்பட்ட வருவாய் ஆதாரம் ஏதும் இல்லை என்றும் வாதிடப்பட்டது.

மேலும், இருவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: தவெக மாவட்ட செயலாளர்கள் தேர்வு; பனையூரில் குவிந்த நிர்வாகிகள்.. தனித்தனியாக சந்திக்கும் விஜய்?

முன்னாள் எம்எல்ஏ ஞானசேகரன் மற்றும் அவரது மனைவி தரப்பில், வருமான வரித்துறை கணக்கின் அடிப்படையில் மட்டுமே லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கை பதிவு செய்துள்ளது என்றும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படக்கூடிய காலகட்டத்திற்கு முன்பே இருவருக்கும் ஏராளமான சொத்துக்கள் இருந்ததாகவும் வாதிடப்பட்டது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில், இந்த வழக்கிலிருந்து இருவரையும் விடுவித்து விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரியானது என்பதால் அதனை உறுதி செய்ய வேண்டும் என வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், முன்னாள் எம்.எல்.ஏ. ஞானசேகரன் மற்றும் அவரது மனைவியை விடுவித்து வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார். மேலும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, விசாரணையை தொடர வேண்டும் என்று வேலூர் நீதிமன்றத்திற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Last Updated : Jan 10, 2025, 5:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.