தஞ்சாவூர்: கும்பகோணத்தைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர். கனேஷ், எம்.ஆர்.சுவாமிநாதன். அந்தப் பகுதியில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படுவர்.
இவர்கள் இருவரும் தங்களுக்கு சிங்கப்பூரில் தங்க சுரங்கம், ஹெலிகாப்டர், மிகப்பெரிய பால்பண்ணை உள்ளிட்டவை இருப்பதாக பொதுமக்களிடத்தில் தெரிவித்துள்ளனர்.
அதிக வட்டி, தங்க நாணயம் இலவசம்
தொடர்ந்து தங்களிடம் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைப்பதுடன், தங்க நாணயமும் இலவசமாக வழங்கப்படும் என பொதுமக்களிடத்தில் ஆசை வார்த்தைக் கூறியுள்ளனர். இவர்களுக்கு இடைத்தரகராக வெங்கடேச சாஸ்திரிகள் என்பவர் செயல்பட்டு வந்துள்ளார்.
இதனை நம்பி பலரும் பணத்தை முதலீடு செய்துள்ளனர். பின்னர் முதலீடாகப் பெறப்பட்ட பல கோடி ரூபாயுடன் இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தலைமறைவு நபர்கள், இடைத்தரகர் உள்ளிட்டோரின் சொத்துகளை பறிமுதல் செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து இழந்த பணத்தை மீட்டுத்தரவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து இன்று (ஆக.2) மனு அளித்தனர்.
இதையும் படிங்க: வேலூரில் 30 சவரன் நகை, ரூ. 70 ஆயிரம் கொள்ளை