ETV Bharat / state

பாஜக தமிழ் இனத்திற்கு ஒவ்வாத கட்சி- ப.சிதம்பரம் விமர்சனம் - தமிழ் இனத்திற்கு ஒவ்வாத கட்சி

சிவகங்கை : பாஜக தமிழ் மண்ணுக்கும், தமிழ் இனத்துக்கும் ஒவ்வாத கட்சி என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

ப.சிதம்பரம்
author img

By

Published : Apr 1, 2019, 6:02 PM IST

சிவகங்கையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது, பாஜக கட்சி தமிழ் மண்ணுக்கும், தமிழ் இனத்துக்கும் ஒவ்வாத கட்சி என்றும், தமிழ் இனத்தை பாழ்படுத்த வந்த பாசிச பாஜகவை இந்த மண்ணில் நட விடமாட்டோம்.

பாஜக தமிழ் இனத்திற்கு ஒவ்வாத கட்சி-ப. சிதம்பரம் விமர்சனம்

அது இந்தியாவிற்கே வெட்கக்கேடு ஆகும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில் கூட்டணிக் கட்சி தலைவர்கள் மற்றும் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை   ஆனந்த்
ஏப்ரல்.01

பா.ஜ.க தமிழ் மண்ணுக்கும், தமிழ் இனத்துக்கும் ஒவ்வாத கட்சி - முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு

சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் மதச்சார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பா.ஜ.க தமிழ் மண்ணுக்கும், தமிழ் இனத்துக்கும் ஒவ்வாத கட்சி என பேசினார்.

சிவகங்கையில் உள்ள தனியார் மஹாலில் மதச்சார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணியின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டமானது நடைபெற்றது. 

இதில் காங்கிரஸ், திமுக, விசிக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்தி சிதம்பரமும் பங்கேற்றார். 

இதில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில்; 

பா.ஜ.க தமிழ் மண்ணுக்கும், தமிழ் இனத்துக்கும் ஒவ்வாத கட்சி என்றும் தமிழ் இனத்தை பாழ்படுத்த வந்த பா.ஜ.கவை இந்த மண்ணில் நட விடமாட்டோம் வளர விடமாட்டோம் என உறுதியேற்போம் என்றும் பேசினார். 

மேலும் ஏற்றத்தாழ்வுகள் இருந்தால்தான் சமுதாயத்திற்கு பாதுகாப்பு என காவி உடையணிந்து பெரிய மாநிலத்தில் முதல்வர் கூறிவருகிறார். அது இந்தியாவிற்கே வெட்கக்கேடு என்றும் கூறினார். 

ஒரு தேர்தல்தானே என நினைக்காதீர்கள் அதன்பின் மற்றொரு தேர்தல் ஒழிந்து கொண்டிருக்கிறது என்றும் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமராகும் போது தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக அமர்வார் என்றும் தெரிவித்தார். 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.