தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அருகேயுள்ள மல்லபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ரமேஷ். தொடர்ந்து 2ஆவது முறையாக, சுயேட்சையாக வென்ற இவரது ஊராட்சிக்குட்பட்டு, மல்லபுரம், கச்சுகட்டு, திருமலைராஜபுரம், கீழதிருமலைராஜபுரம், வில்வேலங்குடி ஆகிய கிராமங்களை உள்ளடக்கி சுமார் 900 குடும்பங்கள் உள்ளன. ரமேஷின் மகள் ஷாலினிக்கு, மணமகன் கைலாசுடன், நாளை (ஜுன் 24) கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இதற்காக, இவர் தனது ஊராட்சிக்குட்பட்ட 900 குடும்பத்தில் உள்ள தலைவர் மற்றும் தலைவி பெயர்களை தன்னுடைய உறவினராக கருதி, அழைப்பிதழில் அனைவரின் பெயரையும் குறிப்பிட்டதுடன், ஒவ்வொருவர் வீட்டிற்கும் தானே நேரில் சென்று, பழங்கள், வெற்றிலை பாக்குடன், தனது மகளின் திருமண அழைப்பிதழ் கொடுத்து திருமணத்திற்கு அழைத்து வருகிறார். ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் இல்ல திருமண அழைப்பிதழை கண்ட, மல்லபுரம் ஊராட்சி மக்கள், இதனை வியந்தம், ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.
தங்கள் ரத்த உறவுகளின் பெயர்களையே அழைப்பிதழில் குறிப்பிட யோசிக்கும் இன்றைய கால கட்டத்தில், சாதி மதத்திற்கும் அரசியல் கட்சிகளுக்கும் அப்பாற்பட்டு, எவ்வித பாகுபாடின்றி அனைவரின் பெயரையும் தனது குடும்பமாக பாவித்தது மிகையல்ல. ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷின் செயலை, மல்லபுரம் ஊராட்சி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளதால், ஊராட்சி மன்ற தலைவரை மனமாற பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அழிந்து போயிருக்கிறார்கள்.. திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது': முதலமைச்சர்