ETV Bharat / state

பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார் - மகேஷ் பொய்யாமொழி - tanjavur latest news

ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பள்ளிக்கூடங்கள் திறப்பது குறித்து, கரோனா தடுப்பூசி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த பின் முதலமைச்சர் முடிவு செய்வார் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
மகேஷ் பொய்யாமொழி ஆய்வு
author img

By

Published : Jul 29, 2021, 4:26 PM IST

தஞ்சாவூர் : ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழ மன்னன் காலத்தில் நிலத்தடி நீரை சேமிக்க வெட்டப்பட்ட கள்ளப்பெரம்பூர் ஏரியின் கரையை பலப்படுத்தும் விதமாகவும், நீர் ஆதாரத்தை பாதுகாக்கும் விதமாகவும் கரைகளின் இரண்டு புறங்களும் 5 ஆயிரம் பனை விதைகளும், 5 ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 500 மரங்களைக் கொண்ட குருங்காடை திறந்து வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், ”மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு பள்ளிகளில் மரம் நடவேண்டும். ரத்ததானம் போல் மரம் நடுவதை மாணவர்கள் பின்பற்றிட வேண்டும் என்றார்.

மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரையிலான பள்ளிகள் திறக்கப்படுமா என்கிற கேள்விக்கு, ”மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் வாய்ப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து முதலமைச்சர் முடிவு செய்வார். அரசுப்பள்ளிகளை இன்னும் 2 ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தப்படும். அரசு பள்ளிகளில் சேர சிபாரிசு செய்யும் நிலையும் ஏற்படும். அரசு பள்ளிகளில் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலை கற்றுத்தர முயற்சிக்கப்படும்” என்று பதிலளித்தார்.

இதையும் படிங்க: பெண்களுக்கு கடனுதவி: தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.