ETV Bharat / state

உலக சுற்றுச்சூழல் தினம்: 250 ஆலமர போத்துகள் நடவு!

தஞ்சாவூர்: வடபாதிமங்கலத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மத்திய அரசின் நேரு யுவகேந்திரா அமைப்பு சார்பில் 250 ஆலமர போத்துகள் நடப்பட்டன.

 banyan sapling program
banyan sapling program
author img

By

Published : Jun 7, 2020, 8:09 AM IST

தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள வடபாதிமங்கலம் பகுதி வழியாகச் செல்லும் வெண்ணாற்றங்கரை அண்மையில் தூர்வாரப்பட்டுள்ளது. அதனால் அதன் கரையோரங்களில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி 250 ஆலமரப் போத்துகள் நடுவதற்காகத் திட்டமிடப்பட்டது. அதன்படி "வனம் சுற்றுச்சூழல்" என்ற தன்னார்வ அமைப்பும், வடபாதிமங்கலம் ஊராட்சி மற்றும் மத்திய அரசின் நேரு யுவகேந்திரா அமைப்பும் இணைந்து 250 ஆலமரப் போத்துகளை நட்டன.

இதுகுறித்து வனம் சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த கலைமணி, "ஆற்றுக் கரைகளில் உள்ள பழமையான ஆலமர கிளைகளிலிருந்து குச்சிகளை வெட்டி, அதனை போத்துத்துகளாக நடவு செய்வது, மரக்கன்றுகளை நடுவதை விட எளிதானது. அதுமட்டுமல்லாமல் சீக்கிரமாக வளரக்கூடியது'' எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.