ETV Bharat / state

திருப்பனந்தாள் கோயிலில் வரும் 7ஆம் தேதி புனித நீர் போர் யாகசாலை பூஜை - தருமை ஆதீனம் - திருப்பனந்தாள் பெரியநாயகி

திருப்பனந்தாள் பெரியநாயகி உடனாகிய செஞ்சடையப்பர் திருக்கோயிலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் வரும் 07ஆம் தேதி நடைபெறுகிறது.

தருமை ஆதீனம்
tharumai aathinam
author img

By

Published : Jul 2, 2023, 6:38 PM IST

தருமை ஆதீனம்

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள திருப்பனந்தாள் பெரியநாயகி உடனாகிய செஞ்சடையப்பர் திருக்கோயில், திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான 27 திருக்கோயில்களில் ஒன்றாகும். இக்கோயில் தேவாரப் பதிகம் பெற்ற சிறப்புடைய தலம், தல விருட்சம் பனை மரமாகும். இத்தல அம்பிகை அருந்தவம் இருந்து சிவபெருமானிடம் ஞானோபதேசம் பெற்றதும், இந்திரனின் சாபத்தால், ஐராவத யானை நாரதரின் சொற்படி, இத்தல தடாகத்தில் நீராடி, செஞ்சடையப்பரை வழிபட்டு, தன் முன்னுருவம் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது.

மேலும், அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் எனும் குறளுக்கு ஏற்ப, இத்தல இறைவன், சுயம்பு மூர்த்தி, தாடகையின் அன்பிற்கிணங்கி, திருமுடியை சாய்த்து மலர் மாலையினை ஏற்றுக் கொண்டதும், குங்குலிய நாயனாரின் அன்பிற்கு இணங்கி, தலை நிமிர்ந்தார் என்பதும் இத்தல வரலாறாகும்.

இத்தலத்தில் வாசுகியின் மகளான சுமதி எனும் நாக கன்னிகை வழிபட்டு, அரித்துவசன் எனும் மன்னனை மணந்து, பின்னர் இங்கு பல்வேறு திருப்பணிகள் செய்து, நிறைவாக முக்தியும் பெற்றார்கள். இத்தலத்திற்கு இதற்கு முன்பு, கடந்த 1968 மற்றும் 2003ம் ஆண்டுகளிலும் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு, பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் வரும் 07ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9.15 மணி முதல் 09.45க்குள் சஷ்டி திதி, பூரட்டாதி நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

இத்திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று, மண்ணியாற்றில், ஊற்று அமைத்து, அதற்கு தருமை ஆதீன குருமணிகள் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சிறப்புப் பூஜைகள் செய்து, இரு கடங்களில் புனிதநீர் எடுத்து, அதனை திருக்கடையூர் அபிராமி திருக்கோயில் மற்றும் திருவையாறு ஐயாரப்பர் திருக்கோயில் ஆகியவற்றிலிருந்து இரு யானைகள் வரவழைக்கப்பட்டிருந்தன.

இதையும் படிங்க: சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பள்ளி ஆசிரியர் - உடல் உறுப்புகளைத் தானம் வழங்கிய மனைவி!

பின்பு இரு யானைகள் மீது சுமந்து, கோயில் காளை, ஒட்டகம் மற்றும் 3 நாட்டிய குதிரைகள், ஏராளமான பெண்கள் முளைப்பாரி சுமந்தபடி, தவில், நாதஸ்வரம், நந்தி வாத்தியங்கள் முழங்க, ஊர்வலமாக திருக்கோயிலை வலம் வந்து கோயில் கொடிமரம் முன்பு வந்து, புனிதநீர் கலசங்கள், மற்றும் அதனைக் கொண்டு வந்த யானைகள், ஊர்வலமாக வந்த கோயில் காளை, ஒட்டகம், குதிரைகளுக்கும் பூஜைகள் செய்து, மலர் மாலைகள், புதிய வஸ்திரங்கள் சாற்றி மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், காசி திருமடத்தின் இளவரசு சபாபதி தம்பிரான் சுவாமிகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து, நாளை மாலை, கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை தொடங்குகிறது. மேலும், முதற்கட்டமாக 05ம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு தேரடி விநாயகர் மற்றும் திருவீதி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்குக் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

பிறகு, 06ம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு, தருமை ஆதீன ஊருடையப்பர் திருக்கோயில் மற்றும் திருப்பனந்தாள் காசித்திருமடத்தின் வீரியம்மன், விஸ்வநாதர் திருக்கோயில் ஆகிய 3 கோயில்களின் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. நிறைவாக, 07ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 09 மணிக்கு, 08ம் கால யாகசாலை பூஜை நிறைவில் மகா பூர்ணாஹதியும், மகா தீபாராதனையும் நடைபெற்ற பிறகு, செஞ்சடையப்பர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகமும் தொடர்ந்து மகா அபிஷேகமும், சண்டயாகமும் நடைபெற்று இரவு திருக்கல்யாணமும் அதனைத்தொடர்ந்து சுவாமி திருவீதியுலாவும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இன்று நடைபெற்ற யாகசாலைக்கு புனிதநீர் கொண்டு வருதலை அடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த தருமை ஆதீன 27வது குருமகா சந்நிதானம் கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், ’’திருப்பனந்தாள் பெரியநாயகி உடனாகிய செஞ்சடையப்பர் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 7ஆம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, வரும் 2024 தை மாதம் அதாவது பிப்ரவரி 02ம் தேதி புகழ்பெற்ற சரபேஸ்வரர் தலமாக விளங்கும் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் அறம் வளர்த்தநாயகி சமேத கம்பகரேஸ்வரசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது’’ எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிங்க: 2020-21 முதலே ஆன்லைன் கலந்தாய்வில் முறைகேடு - மீன்வளப் பல்கலைக்கழகத்தில் அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.