தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 48 வட்டங்களில் ஒப்பந்த அடிப்படையில் 450 பேர் தூய்மைப்பணி புரிந்து வருகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 412 சம்பளமாக தருவதில், மாதத்தில் நான்கு நாட்களின் சம்பளத்தை மாநகராட்சி நிர்வாகம் முறைகேடாக பிடித்தம் செய்து கொள்கின்றனர்.
மேலும், இந்த தூய்மைப்பணியாளர்களுக்கு அவர்கள் பணிக்கான பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் வழங்கப்படுவது இல்லை எனவும் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், மார்க்கெட் போன்ற பகுதிகளிலும், சாலைகளில் உள்ள குப்பைகளை ஆறு வகையாக பிரித்துக் கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்துவதாகவும் ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதனிடையே, முன்பு பணி நேரம் காலை 6:00 மணி - 10:00 மணி, மதியம் 2:00 - 5:00 மணி என இருந்ததை தற்போது காலை 6 முதல் மாலை 6 மணிவரை பணி செய்ய வற்புறுத்துவதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர். சென்னையை சேர்ந்த சரம் என்ற நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் இப்பணி வழங்கப்பட்டுள்ளது எனவும் பணிச்சுமை குறித்து புகார் தெரிவித்தும் கடந்த 15 தினங்களாக அந்த நிறுவனம் எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் பணியாளர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: "ரோட்டை சுத்தம் செய்யும் எங்களுக்கு அதில் அமர உரிமை இல்லையா?" - நெல்லையில் தூய்மை பணியாளர்கள் ஆதங்கம்!
எனவே, உடனடியாக தங்களது கோரிக்கை நிறைவேற்ற கோரி 300-க்கும் மேற்பட்ட தூய்மைப்பணியாளர் மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தூய்மைப்பணியாளர் சிலர் கூறுகையில், “இந்த பணியை கடந்த 20 ஆண்டுகளாக நாங்கள் செய்து வருகிறோம். இந்த பணி மூலம் எங்களுக்கு எவ்வித நல்லுதவியும் இதுவரை வழங்கப்படவில்லை என்று வருந்தினர்.
அதிகரிக்கும் வேலைப்பளு; கைக்கு கிட்டாத சம்பள பாக்கி: ஒப்பந்த முறையை எங்களுக்கு பணிகள் வழங்கப்படிகிறது. இந்த ஒப்பந்த முறையை கைவிட்டு நகராட்சி நிர்வாகம் பணியை எடுத்து நடத்த வேண்டும். இந்த ஒப்பந்த முறை நிர்வாகம் குப்பைகளை ஏழு வகைகளாக பிரிக்குமாறு கூறி கட்டாயப்படுத்துகின்றனர். எங்களால் அதை செய்ய முடியாது. குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என இரண்டு வகைகளாக மட்டுமே பிரிக்க முடியும் என்றனர்.
மேலும், எங்களை ஒப்பந்தத்திற்கு எடுத்த எஸ்.எஸ் நிறுவனம் இரண்டு ஆண்டுகள் தாண்டியும் இதுவரை எங்கள் சம்பள பாக்கியை வழங்கவில்லை. எங்கள் பணிக்கான பாதுகாப்பு உபகரணங்களும் எங்களுக்கு வழங்கப்படுவது இல்லை. வேலை நேரத்தையும் உயர்த்தியுள்ளனர். இதற்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும். எங்களது நலன் கருதி கோரிக்கைகளை விரைந்து (sanitary worker Strike in Thanjavur) நிறைவேற்ற வேண்டும்” என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளில் நேரம் மாற்றம் செய்வது குறித்து எந்த திட்டமும் இல்லை:அமைச்சர் முத்துசாமி