தஞ்சாவூர்: கடந்த சில நாள்களுக்கு முன்பு அரியலூரைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக அவர் பேசும் காணொலி காட்சி ஒன்றை பதிவு செய்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அம்மாணவி பயின்ற பள்ளியில் ஆய்வு செய்து தகவல்களை சமர்ப்பிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனையடுத்து, அரசின் உத்தரவின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அப்பள்ளியில் ஆய்வு நடத்தில் மாணவி குறித்த விவரங்களை சேகரித்து அரசிடம் சமர்ப்பித்துள்ளார்.
இந்த ஆய்வில், மாணவி பள்ளியில் பயின்ற விவரங்கள், அவர் எந்த ஆண்டு பள்ளியில் சேர்ந்தார் போன்ற விவரங்கள் அடங்கிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: இரவு நேர ஊரடங்கு ரத்து: பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு