திருச்சி மாவட்டம் கல்லணையில் இன்று (ஜன.18) காலை 6 மணி நிலவரப்படி கொள்ளிடம் ஆற்றில் 9,925 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவேரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை.
மேட்டூரில் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர் இருப்பு 105.75 அடியாக உள்ளது. வினாடிக்கு 1,993 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்த தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் தற்போது வறண்ட வானிலை நிலவுவதால் விவசாய பணிகள் தொடங்கியுள்ளன.
இதையும் படிங்க: தென்மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்’ - சென்னை வானிலை ஆய்வு மையம்!