ETV Bharat / state

போகி பண்டிகையையொட்டி புகைமண்டலமான சென்னை - நள்ளிரவு பெய்த மழையால் சமநிலையில் காற்று மாசு... - BHOGI FESTIVAL

போகி பண்டிகையையொட்டி சென்னை புகை மண்டலமாக காட்சியளித்தது. ஆனால், நள்ளிரவு பெய்த மழையால் காற்று மாசு சமநிலையை அடைந்தது.

புகை மூட்டமாக உள்ள சென்னை
புகை மூட்டமாக உள்ள சென்னை (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2025, 11:18 AM IST

சென்னை: தமிழர்களின் திருநாளாம் பொங்கல் உலகம் முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. பொங்கலின் முதல்நாளான இன்று போகியை தமிழர்களை கொண்டாடினர். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதற்கு ஏற்ப போகியை தமிழர்கள் இன்று உற்சாகமாக கொண்டாடினர்.

அதிகாலையே எழுந்த மக்கள் வீடுகளில் உள்ள தேவையில்லாத பழைய பொருட்களை பொதுமக்கள் தீயிட்டு கொளுத்தினர். மேலும், பழைய பொருட்களோடு டயர், டியூப் உள்ளிட்ட பொருட்களையும் தீயில் போட்டு மக்கள் கொளுத்தினர். இதனால் போகி பண்டிகையான இன்று காற்று மாசு ஏற்படுவது தவிர்க்க முடியாததாக மாறிப் போய் இருக்கிறது.

அந்த வகையில் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனால் சென்னை மாநகர பகுதிகளும், புறநகர் பகுதிகளும் புகை மண்டலமாக காட்சி அளித்தன. அதிகாலையில் இருந்து சென்னையில் புகை மூட்டம் நீடித்து வந்தது. மழை பனிப்பொழிவுடன் புகைமூட்டமும் சேர்ந்து கொண்டதால் சாலையில் முன்னால் யார் செல்கிறார்கள்? என்ன நடக்கிறது? என்பதே தெரியவில்லை.

இதனால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகன முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே சென்றனர். பெரிய கனரக வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தில் பின்புற விளக்குகளையும் எரிய விட்டபடியே வாகனங்களை ஓட்டிச் சென்றனர். இதன் காரணமாக சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மெதுவாகவே சென்றன.

சென்னையில் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட மாநகர பகுதிகள் அனைத்திலும் புகை மூட்டம் நிறைந்து காணப்பட்டது. அதே நேரத்தில் புறநகர் பகுதிகளான தாம்பரம், செங்குன்றம், மதுரவாயல், பூந்தமல்லி, அம்பத்தூர், கேளம்பாக்கம், மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் புகைமூட்டம் அதிகமாக இருந்தது. மின்சார ரயில்கள் இயக்கப்படும் வழித்தடங்களிலும் புகைமூட்டம் நிரம்பி வருகிறது. ரயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்றாலும், பயணிகள் சற்று சிரமத்திற்கு உள்ளாகினர்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் மிதமான அளவிற்கு உயர்ந்த காற்று தர குறியீடு

மணலி, பெருங்குடி, ராயபுரம் உள்ளிட்ட மூன்று இடங்களில் மிதமான அளவில் காற்று மாசு அதிகரித்தது. மணலியில் 132, பெருங்குடியில் 111, ராயபுரத்தில் 104 என்ற அளவில் காற்று தரக்குறியீடு மாறி உள்ளது.மேலும் சென்னை அருகிலுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 136, கடலூரில் 106, கும்மிடிப்பூண்டியில் 131, ராணிப்பேட்டையில் 130, வேலூரில் 127, விருதுநகரில் 111 என்ற மிதமான அளவிற்கு காற்று தரக்குறியீடு சென்றுள்ளது.0-50 என்ற அளவில் இருந்தால் நல்ல காற்று. 51 - 100 என்ற அளவில் இருந்தால் திருப்திகரமான காற்று என்றும் 101 - 200 என்ற அளவில் இருந்தால் அது மிதமான காற்று மாசு என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.