மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் 2017ஆம் உச்ச நீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. இதனால், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை உறுதியானது. தண்டனைக் காலம் முடிந்து சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலையாகி உள்ளனர்.
அபராத தொகையை செலுத்தாததால் சுதாகரன் இன்னும் விடுதலையாகவில்லை. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, இளவரசி, சுதாகரனின் சொத்துக்கள் பலவற்றை தமிழ்நாடு அரசு அதிரடியாக பறிமுதல் செய்துவருகிறது. நேற்று (பிப்.8) காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள இருவருக்கும் சொந்தமான சில சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் வ. உ .சி., நகர் பகுதியில் உள்ள 26 ஆயிரத்து 540 சதுர அடி காலி மனையை அரசு இன்று (பிப்.9) காலை பறிமுதல் செய்துள்ளது.
இதையும் படிங்க: சசிகலாவுக்கு அளித்த வரவேற்பை சூசகமாக விமர்சித்த ராமதாஸ்