தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள மல்லிபட்டினம் மீன்பிடித் துறைமுகம் ரூ.66 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திறக்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு துறைமுகத்தின் தளத்தில் திடீரென ஒரு பகுதி இடிந்து விழுந்தது. பின்னர், கடல் நீர் துறைமுகத்தின் உள்ளே கசிய ஆரம்பித்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மீனவர்கள் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் பழுதடைந்த பகுதி சீரமைக்கப்பட்டது.
திறப்பு விழா கண்ட ஒரே மாதத்தில் துறைமுக தளம் இடிந்து விழுந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.