தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள கரையூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் மூர்த்தி (36). இவர், மீன்பிடித் தொழில் செய்துவருகிறார். ராமசாமிக்கும் அவரது மகன் மூர்த்திக்குமிடையே தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு கரையூர் தெருவிலுள்ள மாரியம்மன் கோயில் நாடக மேடையில் படுத்திருந்த மூர்த்தியை அவரது தந்தை ராமசாமி கம்பியால் தலையில் அடித்துள்ளார்.
இதில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்குப் போராடிய மூர்த்தி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அதிராம்பட்டினம் காவல் துறையினர் ராமசாமியை கைதுசெய்து விசாரணை செய்துவருகின்றனர்.