தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே கண்டமங்கலம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிவேல் மகன் சுரேஷ் (49). இவர், விவசாயம் செய்து வந்தார். இவருக்கு சில நாள்களாக தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில், கடந்த 29ஆம் தேதி வயிற்று வலி அதிகமாகவே வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்ததில் அவர் மயக்கம் அடைந்துள்ளார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறப்பில் சந்தேகம் இருப்பதாக திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில், சுரேஷ் மனைவி செல்வராணி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.