தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்திலிருந்து டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பிய 7 பேரை சுகாதாரத் துறையினர், காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் கண்டறிந்தனர். தொடர்ந்து அவர்களிடத்தில் நோய்த் தொற்று உள்ளதா என மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியதின் பேரில், அந்த 7 பேரும் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தனர்.
இதனையடுத்து, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர்களை கொண்டு செல்ல தயாரான நிலையில், மேலும் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த இருவர் தாங்களாகவே முன்வந்து, நாங்களும் டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பியுள்ளோம். எனவே எங்களையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துங்கள் என்று கூறியதன் பேரில், ஒன்பது பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்நிலையில், டெல்லிக்குச் சென்று திரும்பியவர்கள் அதிராம்பட்டினத்தில் மேலும் 7 பேர் உள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த 7 பேரையும் கண்டறிந்த சுகாதாரத்துறையினர், வருவாய்த் துறையினர், காவல்துறையினர் அவர்களை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குப் பரிசோதனை செய்ய அழைத்துச் சென்றனர்.
டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பியவர்கள், இதுவரை அதிராம்பட்டினத்தில் மொத்தம் 16 பேர் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:டெல்லி மாநாட்டில் பங்கேற்று புதுக்கோட்டை திரும்பிய 15 பேரில் 10 பேருக்கு கரோனா இல்லை!