உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும்விதமாகப் பிரதமர் மோடி இன்று காலை 7 மணி முதல் மாலை 9 மணி வரை மக்கள் வெளியில் வராமல் மக்கள் ஊரடங்கு உத்தரவை மேற்கொள்ளுமாறு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து மாநிலங்களிலும் மக்கள் ஊரடங்கைப் பின்பற்றிவருகின்றனர்.
தனியார், அரசுப் போக்குவரத்து வாகனங்கள் செயல்படவில்லை. அத்தியாவசிய தேவைகளான பால், உணவகம், மருந்தகம், ஆம்புலன்ஸ் போன்றவை மட்டும் இயங்கும் என அறிவிப்பு வெளியானது. இதற்கு ஆதரவளிக்கும் வகையில் தஞ்சை மாநகரப் பகுதி முழுவதும் அதிகாலை முதல் தற்போதுவரை வெறிச்சோடிக் காணப்படுகிறது.
அத்தியாவசியத் தேவையை தவிர வெளியே வராமல் வீட்டிலேயே தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா: தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சலுகை