தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. தினந்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டுகிறது.
அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டத்திலும் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று (ஆக.25) ஒரே நாளில் 74 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 861ஆக உள்ளது. இதுவரை 797 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 101ஆக உள்ளது.